பெங்களூரு:கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் 224 தொகுதிகளுக்கும் கடந்த 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் என மும்முனை போட்டி நிலவும் கர்நாடகாவில், இன்று (மே 13) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 117 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து அடுத்தடுத்த இடங்களில் பாஜக 76, மதச்சார்பற்ற ஜனதா தளம் 25, சுயேட்சைகள் 5, கல்யாண ராஜ்ய பிரகதி பாக்ஷா, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சர்வோதயா கர்நாடகா பாக்ஷா ஆகிய கட்சிகள் தலா 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
மேலும், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதற்கு மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 113 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையை கொண்ட எண்ணிக்கையில் முன்னிலை வகிப்பதால், அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கியமாக பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமையகத்தில் குவிந்த தொண்டர்கள், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்திலும் அக்கட்சியின் தொண்டர்கள் தலைவர்களின் புகைப்படங்கள் கொண்ட பதாகைகளை கைகளில் ஏந்தியபடி, இனிப்புகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், கனகாபுரா தொகுதி வேட்பாளருமான டிகே சிவகுமாரின் பெங்களூரு வீட்டிலும் தொண்டர்கள் குவிந்துள்ளனர். அங்கும், அவர்கள் லட்டு போன்ற இனிப்புகளை வழங்கி வருகின்றனர். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், “நாங்கள் தனிப்பெரும்பான்மை உடன் வெற்றி பெறுவோம். ‘40 சதவீத கமிஷன் அரசு’ என்ற ஸ்லோகனை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.