புதுச்சேரி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஏகேடி ஆறுமுகம். இவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் இந்திரா நகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருப்பினும், தொடர்ந்து அத்தொகுதியில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு(நவ.19) தனது காரில் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பல் காரை மடக்கி சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் கார் மீது கல்வீச்சு
புதுச்சேரி: காங்கிரஸ் பிரமுகர் காரின் மீது அடையாளம் தெரியாத கும்பல் கல்வீச்சில் ஈடுபட்டது அறிந்து, அவரது ஆதரவாளர்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் காரின் கண்ணாடி சேதமடைந்தது. கல்வீச்சில் ஏகேடி ஆறுமுகத்துக்கு எவ்வித காயம் ஏற்படவில்லை. கல்வீச்சு சம்பவம் அறிந்த அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோரிமேடு காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி, கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, அங்கிருந்து அவரது ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.