தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2024 தேர்தலைக் குறிவைத்து மாற்றம்...பிரசாந்த் கிஷோர் கைகளுக்குள் காங்கிரஸ்! - அண்மை செய்திகள்

காங்கிரஸ் கட்சியில் தலைகீழ் மாற்றங்களை அமல்படுத்த பிரசாந்த் கிஷோர் பல்வேறு திட்டங்களை வகுத்துவரும் நிலையில், காங்கிரஸில் அவர் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

Prashant Kishor
Prashant Kishor

By

Published : Jul 31, 2021, 12:27 PM IST

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு முன்னதாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் திமுகவுக்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார்.

தொடர்ந்து இந்த இரண்டு மாநிலங்களிலும், திமுகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பெருவெற்றி பெற்ற நிலையில், தனது ஐ-பேக் நிறுவனத்திலிருந்து விலகுவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், இமாச்சல பிரேதசம், கோவா, மணிப்பூர் என பாஜக ஆளும் மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாபிலும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிரான அணியை வலுப்படுத்தும் நோக்கில் பிராசந்த் கிஷார் செயல்படுவதாக முன்னதாகக் கூறப்பட்டது.

மேலும் முன்னதாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் ஆகியோரையும் சந்தித்து பிரசாந்த் கிஷோர் பேசினார்.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலைக் குறிவைத்து பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்துள்ள திட்டங்களை காங்கிரஸ் அமல்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும், காங்கிரஸின் மூத்த தலைவர்களுடன் தனது திட்டங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசித்ததாகவும், காங்கிரஸ் காரியக் குழு உறுப்பினர்கள் (சிடபிள்யூசி) கூடி இந்த விவகாரம் குறித்து விவாதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

காங்கிரஸ் கட்சியில் தலைகீழ் மாற்றங்களை அமல்படுத்த பிரசாந்த் கிஷோர் பல்வேறு திட்டங்களை வகுத்துவரும் நிலையில், அவர் காங்கிரஸில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. முன்னதாக அரசியலில் ஈடுபர பிரசாந்த் கிஷோர் விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:போட்டாச்சு.. போட்டாச்சு... ராகுல் காந்தி!

ABOUT THE AUTHOR

...view details