டெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது X பக்கத்தில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டடக்கலை ஜனநாயகம் மற்றும் உணர்வுகளைக் கொன்று விட்டதாகவும், 140 கோடி இந்தியர்களை பாஜக அவமதிப்பு செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை ‘மோடி மல்டிபிளக்ஸ்’ அல்லது ‘மோடி மேரியட்’ என அழைக்கலாம் எனவும், 2024ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றக் கட்டடம் சிறந்த பயன்பாடு கிடைக்கும் எனவும், புதிய நாடாளுமன்றக் கட்டடம் சிறந்த ஏற்பாடுகள் செய்து பிரதமர் திறந்ததற்கான நோக்கம் என்ன என்பது தெரிய வருகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குழப்பங்கள் மற்றும் உரையாடல்கள் மூலம் ஜனநாயகம் கொல்லப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள அரங்குகளில் வசதிகள் சரியாக இல்லை என்பதால், ஒருவரை ஒருவர் பார்க்கத் தொலைநோக்கிகள் தேவைப்படுகின்றன என குற்றம் சாட்டியுள்ளனர். பழைய நாடாளுமன்றக் கட்டடம் உரையாடல்களை எளிதாக்கியது. ஆனால், புதிய நாடாளுமன்றத்தில் நடத்துவதற்குத் தேவையான பிணைப்பை பலவீனப்படுத்தும் வண்ணம் உள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இரு அவைகளை இணைப்பதில் சிக்கலாக உள்ளன எனவும், பழைய கட்டடம் வட்டமாக இருப்பதால் ஒவ்வொரு இடத்திற்குச் செல்வது எளிதாக இருக்கம். ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வழி தவறினால் அச்சம் ஏற்படும் நிலை உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
பழைய நாடாளுமன்றத்தில் இருக்கும் மகிழ்ச்சி தற்போது இல்லை எனவும், புதிய நாடாளுமன்றத்தில் வேதனைகள் மட்டும் இருப்பதாகவும், பழைய கட்டடத்திற்குச் செல்வதை எதிர்பார்ப்பாக உள்ளன. மேலும், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் பணிகள் தொடங்கும்போது தலைமைச் செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் கருத்துக்கள் கேட்டகப்படவில்லை எனக் குற்றம் சாட்டினார். புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கு முன்பு அதனைப் பயன்படுத்து நபர்களிடம் ஆலோசனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிற்கு எதிராக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா காங்கிரஸ் கட்சியின் கீழ்த்தரமான மனநிலையில் கூட 140 கோடி இந்தியர்களை அவமதிக்கும் செயலே, காங்கிரஸ் நாடாளுமன்றத்திற்கு எதிரானது. இது முதல் முறை அல்ல, 1975இல் முயற்சித்து மோசமாக தோல்வியைச் சந்தித்தது என தனது ”X” பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள தனது நிலையை அறிந்து காங்கிரஸ் பேச வேண்டும் எனவும், சப்தர்ஜங் சாலை வளாகம் உடனடியாக மீண்டும் இந்திய அரசாங்கத்திற்கு மாற்றப்படும் என்றால், அனைத்து பிரதமர்களுக்கு அருங்காட்சியகம் இருந்து இருக்கும், இந்திரா காந்தி நினைவு அருங்காட்சியகம் அமைந்து உள்ள இடம் அப்போதைய பிரதமர் இல்லம் என்றும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
புதிய நாடாளுமன்றக் கட்டடம் செப்டம்பர் 19 விநாயக சதுர்த்தியை முன்னிட்டு செயல்பாட்டுக்கு வந்தது. மேலும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனைகளுக்கு விசா வழங்க சீனா மறுப்பு! கிரண் ரிஜிஜூ கண்டனம்!