புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையம் போக்குவரத்து நகரிலிருந்து மூலக்குளம் வரையிலான சாலையோரத்தில் பலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். தற்போது இந்த சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதன்காரணமாக சாலையோர வீடுகளை காலி செய்யக்கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆனால் பலர் காலி செய்யவில்லை. இதனிடையே, இன்று (ஜூலை 22) பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஜேசிபி வாகனத்துடன் சம்பவயிடத்திற்கு சென்று அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சியினர் அலுவலர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த வேளையில் பொதுமக்களில் சிலர் ஜேசிபி வாகனத்தின் மீது கற்களை வீசினர். அதனால் காவலர்கள் கட்சியினரையும், கற்களை வீசியவர்களையும் இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றினர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலர்கள், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர்.
இதையும் படிங்க: குருவிப்பனை ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்: ஏஎல்சி நிர்வாகத்தினருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம்