தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாணவர்களின் பையில் ஆணுறை, சிகரெட், கருத்தடை மாத்திரைகள்..! அதிர்ச்சியில் ஆசிரியர்கள் - செல்போன்

பெங்களூரில் பள்ளி மாணவர்களின் பையில் செல்போன் இருக்கிறதா என சோதனை செய்த ஆசிரியர்கள் ஆணுறை, சிகரெட், கருத்தடை மாத்திரைகள் ஆகியவைகளை கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

பெங்களூருவில் மாணவர்களின் பையில் ஆணுறை, சிகரெட், கருத்தடை மாத்திரைகள்..! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பெங்களூருவில் மாணவர்களின் பையில் ஆணுறை, சிகரெட், கருத்தடை மாத்திரைகள்..! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்

By

Published : Dec 1, 2022, 9:37 AM IST

பெங்களூரு(கர்நாடகா): பள்ளி மாணவர்கள் வகுப்புக்கு செல்போன் கொண்டு செல்வது குறித்து சில ஆசிரியர்கள் சமீபத்தில் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இந்தப் புகாரைத் தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் அசோசியேட்டட் மேனேஜ்மென்ட் (KAMS) அதன் உறுப்பினர் பள்ளிகளுக்கு மாணவர்களின் பைகளை சரிபார்க்க உத்தரவிட்டது.

நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களின் பைகளை சோதனையிட்டனர். அப்போது பையில் ஆணுறை, லைட்டர், சிகரெட், ஒயிட்னர் உள்ளிட்ட பொருட்கள் சிக்கியது. மேலும் மாணவிகள் சிலரது பைகளில் கருத்தடை மாத்திரையும் இருந்துள்ளது. 8, 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பையில் இதுபோன்ற பொருட்கள் இருந்ததை கண்டு பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பை சோதனையின் போது கிடைத்த பொருட்கள் குறித்து அந்தந்த மாணவர்களின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் அந்த மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றாமல், அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் கொடுக்க பள்ளி நிர்வாகமும், பெற்றோரும் முன்வந்துள்ளனர்.

'சமீப காலமாக மாணவர்கள் நவீனத்தை அதிகம் பின்பற்றி வருகின்றனர். அனைத்து பொருட்களும் அனைவரும் அணுக கூடிய வகையில் எளிதாகி விட்டது. அதிகரித்த செல்போன் பயன்பாடு, வரம்பற்ற இணைய பயன்பாடு குழந்தைகளின் கவனங்களை திசை திருப்புகிறது. இந்த வழக்கில், அவர்களை தண்டிக்காமல், அவர்களுக்கு உண்மைகளை புரிய வைப்பது நல்லது' என்கிறார், கே.ஏ.எம்.எஸ்., முதன்மை செயலர் டி.சசிகுமார்.

பதிவுசெய்யப்பட்ட உதவி பெறாத தனியார் பள்ளிகள் மேலாண்மை சங்கத்தின் (RUPSA) தலைவர் லோகேஷ் தாலிகட்டே கூறுகையில், 'நவீனத்தின் அறிமுகத்தால் குழந்தைகள் தங்கள் மனதை இழந்து வருகின்றனர். அவர்கள் அறியும் முன்னரே நவீனத்துவம் அவர்களை ஆட்கொண்டுவிட்டது. கடந்த காலத்தில் குழந்தைகளை தொந்தரவு செய்த பிரச்சினைகள் வேறு, இன்று அவர்களைத் தொந்தரவு செய்யும் பிரச்சினைகள் வேறு. பாடத்திட்டத்திற்கு ஏற்ப மாறும் அணுகுமுறை குறித்து கல்வி நிறுவனங்களும் கவனமாக இருக்க வேண்டும்,' என்றார்.

'குழந்தைகளின் மனம் வளரும். அவர்களுக்குத் தேவைப்படுவதற்கு முன்பே நிறைய யோசனைகள் அவர்களுக்குக் கிடைக்கும். அவர்கள் புரிந்து கொள்வதற்கு முன்பே பல்வேறு கருத்துக்கள் அவர்களை வெகுவாகக் கவர்ந்து விடுகின்றன. இதன் காரணமாக, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களின் வளரும் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடுகளுடன் போட்டி போடும் வகையில் நமது கல்வி முறையும், வாழ்க்கை முறையையும் மாறிவிட்டதை புரிந்து கொள்ள வேண்டும்' என லோகேஷ் தாலிகட்டே கூறினார்.

இதையும் படிங்க:குஜராத் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ABOUT THE AUTHOR

...view details