தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கின் உடல்நிலை சீரானது’ - மருத்துவமனை நிர்வாகம் - உத்தரப் பிரதேச செய்திகள்

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது என சஞ்சய் காந்தி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Kalyan Singh
Kalyan Singh

By

Published : Jul 10, 2021, 1:35 PM IST

Updated : Jul 10, 2021, 4:08 PM IST

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உடல்நலக் குறைவு காரணமாக தலைநகர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

கடந்த சில நாள்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவரும் கல்யாண் சிங்கின் உடல் நிலை குறித்து முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். இந்நிலையில், கல்யாண் சிங்கின் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

89 வயதான கல்யாண் சிங்கிற்கு சுயநினைவு திரும்பிவிட்டதாகவும், தற்போது அவரிடம் தொடர்புகொண்டு பேச முடிவதாகவும் அவரது உடல்நிலையை கண்காணித்து வரும் மருத்துவமனை இயக்குநர் திமான் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் ஆளுநராக இருந்த கல்யாண் சிங் கடந்த ஜூலை நான்காம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். உத்தரப் பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த முதல் முதலமைச்சராக இருந்தவர் கல்யாண் சிங்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு சம்பவம் இவரது ஆட்சிக் காலத்தில்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:2024க்குள் 60,000 கிமீ நெடுஞ்சாலை: அமைச்சர் நிதின் கட்கரி இலக்கு!

Last Updated : Jul 10, 2021, 4:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details