கனிகிரி: ஜனநாயக நாட்டில் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பது வாக்கு தான் என்பதில் சந்தேகமில்லை. அது போல சில தலைவர்களின் விதியை தீர்மானிப்பதும் வாக்கு தான். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் கனிகிரி தொகுதியில் உள்ள சில தலைவர்களின் வாக்கானது வம்புக்குரியதாகும்.
இதனால் வழக்கம் போல் பட்டியல் மாற்றப்பட்டுள்ளது. சில இடங்களில் வாக்குகளானது ஒரே வீட்டு நம்பரில் பதிவாகி உள்ளதால் அதை அடையாளம் கண்டறிந்து நீக்குவதற்கான வழிமுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிகளின் படி, ஒவ்வொரு வாக்காளருக்கும் தனி வீட்டு நம்பர் உண்டு. அதன்படி கனிகிரி தொகுயில் உள்ள 1வது வார்டு பகுதியில் 280 வாக்காளர்கள் தங்களுக்கென தனி வீட்டு நம்பர் இல்லை என ஓட்டு போட்டுள்ளனர்.
மேலும், கொண்டாலாரோ வாக்குச்சாவடியானது கனிகிரி பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வீட்டு நம்பர் 498ல் 100 வாக்குகள் கூடுதலாக சேர்க்கப்படுள்ளன. மேலும், இதே சாவடிக்கு உட்பட்ட இந்திரா காலனி, பிசி காலனி, ராஜீவ்நகர் காலனி போன்ற பகுதிகளில் உள்ள 280 வாக்குகளுக்கு வீட்டு நம்பர் இல்லை.
இதைத்தொடர்ந்து, கனிகிரி, பமுரு, சிலாம்வரி பேட்டை மற்றும் பீட அலவலப்பட்டு பகுதியில் உள்ள 100, 141, 263 மற்றும் 228 எண் கொண்ட வாக்குசாவடியில் உள்ள 0-0 நம்பர் கொண்ட வீட்டில் 40 வாக்குகளும், 1-1 நம்பர் கொண்ட வீட்டில் 50 வாக்குகளும், அதே பகுதியில் 000 நம்பர் கொண்ட வீட்டில் 70 வாக்குகளும், 1-00 நம்பர் கொண்ட வீட்டில் 60 வாக்குகளும் பதிவாகி உள்ளன.
மேலும், இறந்தவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வில்லை எனவும் அதற்கான பணியானது நடைபெற வில்லை எனவும், முன்னதாக ஐந்து முதல் பத்து வருடங்களில் இறந்து போனவர்களின் பெயர்கள் இன்னும் வாக்காளர் பட்டியலில் உள்ளன. இதில் 20க்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர்கள் கார்லாபேட் ரோடு பகுதியில் உள்ளன.
மேலும்,5 வருடத்திற்கு முன்பு இறந்து போனவர் வீர ராமகிருஷ்னா. இவர் கனிகிரி தொகுதியைச் சேர்ந்தவர். இவரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்காமல் இருப்பதாகவும், இவரது படத்தை மட்டும் உருவப்படுத்தி மாற்றியுள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க:திருடன் என நினைத்து இளைஞர் அடித்துக் கொலை - மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?