தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக விவசாயிகள் தலைவர் மீது வழக்குப்பதிவு! - விவசாயிகள் தலைவர் மீது வழக்குப்பதிவு

பாரதிய கிசான் சங்கத் (BKU) தலைவர், ராகேஷ் திகாயத் மீது குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Complaint filed against farmer leader
Complaint filed against farmer leader

By

Published : Dec 31, 2020, 7:53 PM IST

டெல்லி: டிசம்பர் 25ஆம் தேதி ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாரதிய கிசான் சங்கத் (BKU) தலைவர் ராகேஷ் திகாயத், குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகாரில், விவசாயிகள் போராட்டம் குறித்து பேசும்போது பிராமண சமுதாயத்தினரை ராகேஷ் இழிவுபடுத்தி பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயில்களும், பிராமணர்களும் இந்த சமூக முன்னேற்றத்தில் சிறிதளவு கூட பங்கெடுப்பதில்லை என ராகேஷ் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வலம்வர, அது வைரலானது.

பின்னர் ராகேஷ், நான் யாரையும் இழிவுபடுத்த பேசவில்லை. அந்த மக்களும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என்பதே என் எண்ணம். இதை தவறாக சித்தரித்து கூறுகின்றனர் என ட்வீட் செய்திருந்தார்.

இது தொடர்பாக விசாரித்துவிட்டு, நடவடிக்கை எடுக்கபடும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details