டெல்லி:அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக, டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட வின்சென்ட் சேவியர் என்பவர், இந்தியக் கொடியை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த தீபக் கே சிங் என்பவர் அம்மாநிலம் கல்கஜி காவல் நிலையத்தில் வின்சென்ட் மீது நடவடிக்கைக்கோரி புகார் கொடுத்துள்ளார். மேலும், அந்நபரின் சமூக வலைதளக் கணக்குகளை முடக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளார்.