தேசிய மகளிர் ஆணையம் சார்பில் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நோடல் அலுவலர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் மெய்நிகர் சந்திப்பு நடைபெற்றது. இது ஆணைக்குழுவின் மேலாண்மை தகவல் அமைப்பின் (எம்ஐஎஸ்) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட ஆசிட் தாக்குதல் வழக்குகளை மறுஆய்வு செய்து விவாதிக்கும் கூட்டமாகும். ஆய்வு செய்ததில் பதிவான 1, 273 ஆசிட் தாக்குதல் வழக்குகளில் 799 நபர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது
இது குறித்து பேசிய தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, "அக்டோபர் 20ஆம் தேதி வரையிலான தரவுகளின்படி, நாடு முழுவதும் 1,273 ஆசிட் தாக்குதல்களில் 474 வழக்குகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 799 வழக்குகளை யாரும் கண்டுகொள்ளவில்லை. இத்தகைய பாதிப்புகளுக்கு ஆளான நபர்களுக்கு உதவுவது நோடல் அலுவலர்களின் கடமையாகும். குற்றச்சம்பவத்தின் பாதிப்பை பொறுத்து 3 லட்சம் முதல் 8 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது" என்றார்.