தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"உட்கட்சி பிரச்னைகளை பகிரங்கப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது " - கபில் சிபல் - பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்

டெல்லி : காங்கிரஸின் உட்கட்சி பிரச்னைகள் பற்றி விவாதிக்க கட்சிக்குள் எந்தவொரு மன்றமும் இல்லாததால், அது குறித்து பகிரங்கமாக பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் என அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.

உட்கட்சி பிரச்னைகளை பகிரங்கப்படுத்த  வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது
உட்கட்சி பிரச்னைகளை பகிரங்கப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது

By

Published : Nov 16, 2020, 9:25 PM IST

Updated : Nov 16, 2020, 10:33 PM IST

இது தொடர்பாக ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய அவர், " அகில இந்திய காங்கிரஸின் உட்கட்சி பிரச்னைகள் பற்றி விவாதிக்க கட்சிக்குள் எந்தவொரு மன்றமும் இல்லாததால், அது குறித்து பகிரங்கமாக பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றுவரும் இடைத்தேர்தல்களில் காங்கிரஸின் தடுமாற்றம் குறித்து விவாதிக்க வேண்டியது கட்டாயம்.

இந்த முடிவுகள் குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் பேசாதது எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சி சரிவில் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மேலும், கட்சியின் நிறுவன அமைப்பை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அத்துடன், தொண்டர்களில் இருந்து ஊடக நிர்வாகம் வரை அனைத்திலும் கட்சியை பலப்படுத்த வேண்டிய தேவையை உணர வேண்டும்.

கட்சிக்கு சிந்தனைமிக்க தலைமை தேவை. இன்னும் வெளிப்படையாக விஷயங்களை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேறு வழியில்லை. கட்சியின் பதவிகளுக்கும், பணிகளுக்கும் அதிக அனுபவம் வாய்ந்த நபர்களைக் கொண்டு (அரசியல் நிலைமையைப் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் மற்றும் மக்களைச் சென்றடையக்கூடியவர்கள்) இவற்றை செய்யவில்லை என்றால் மாற்றம் நிகழ வாய்ப்பில்லை" என்றார்.

காங்கிரஸுக்குள் அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்கள், நியாயமான உள் தேர்தல்கள், கூட்டு முடிவெடுப்பது மற்றும் முழுநேரத் தலைவர் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் ஆகஸ்ட் 29ஆம் தேதி சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தனர்.

அந்த கடிதத்தில், குலாம்நபி ஆசாத், கபில் சிபல், மணிஷ் திவாரி, ஆனந்த் சர்மா, மிலிந்த் தியோரா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட 23 பேர் கையெழுத்திட்டு இருந்தனர்.

அந்த அதிருப்தி கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் பலரும் தற்போது பதவி இறக்கம் செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

Last Updated : Nov 16, 2020, 10:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details