புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சரவணணை ஆதரித்து அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
'சட்டப்பேரவையை வியாபார நிறுவனமாக மாற்றிய அரசியல்வாதிகளை புறக்கணியுங்கள்' - Marxist Communist Party candidate Saravanan
புதுச்சேரி: சட்டப்பேரவையை வியாபார நிறுவனமாக மாற்றிய அரசியல்வாதிகளை வரும் தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது பேசிய அவர், "புதுச்சேரியில் கடந்த காலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்கள் பணத்திற்காக விலை போனார்கள். சட்டப்பேரவையை வியாபார நிறுவனமாக மாற்றிய அரசியல்வாதிகளை வரும் தேர்தலில் புறக்கணிக்க வேண்டும்.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் வேலையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து மக்களை திரட்டி போராடிவருகிறது" என்று தெரிவித்தார். இத்தேர்தல் பரப்பரையின் போது கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் சுதா, மூத்த தலைவர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.