புதுச்சேரி: புதுச்சேரி கருவடிக்குப்பம் பிள்ளையார் கோயில் குளம், கட்டுமானப் பொருள்கள், கழிவுப் பொருள்கள் கொட்டி மூடிய நிலையில் இருப்பதைக் கண்டு, ஊர் பொதுமக்களுடன் உழவர்கள் நகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.
ஆனால், எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால், இன்று (ஆக 03) கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ஊர் மக்களுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.