மேற்கு வங்கம்: இந்தியா - வங்கதேசம் இடையேயான ஹால்டிபாரி - சிலாஹாட்டி ரயில்வே பாதை, 1965ஆம் ஆண்டுவரை பயன்பாட்டில் இருந்தது. அதன் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் காரணமாக வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்குமான அனைத்து ரயில் இணைப்புகளையும் துண்டிக்கப்பட்டன.
முன்னதாக, 2015ஆம் ஆண்டு மே மாதம் டெல்லியில் இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ரயில்வே கூட்டத்தில் ஹால்டிபாரி நிலையத்திலிருந்து வங்கதேச எல்லைவரை புதிய அகலப் பாதை அமைக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது.
அதனைத் தொடர்ந்து இந்த ரயிவே பாதை புதுப்பிக்கப்பட்டது. இந்த புதுப்பிக்கப்பட்ட ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இருவரும் இணைந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி திறந்து வைத்தனர்.
இந்நிலையில், இன்று (ஆக.1) முதல் ஹால்டிபாரி - சிலாஹாட் ரயில் பாதையில் சரக்கு ரயில் சேவை தொடங்கவுள்ளது. இன்று இயக்கப்படும் இந்த முதல் சரக்கு ரயிலில் ஹால்டிபாரியிலிருந்து வங்கதேசத்தின் நில்பாமரி மாவட்டத்தில் உள்ள சிலாஹட்டிற்கு ஜல்லிக் கற்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளன.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு அவலம் - கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட எம்பிஏ பட்டதாரி!