தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர் விலை ரூ.96 குறைவு - price of the 19 kg cylinder

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ. 96 குறைந்து ரூ. 2,045-க்கு விற்பனையாகிறது.

Etv Bharatவணிக சிலிண்டரின் விலை அதிரடி குறைப்பு
Etv Bharatவணிக சிலிண்டரின் விலை அதிரடி குறைப்பு

By

Published : Sep 1, 2022, 9:23 AM IST

நாட்டில் மூன்று மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டவருகிறது. ஆனால், வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டருக்கான விலை ரூ.96.00 குறைக்கப்பட்டுள்ளது. 5 மாதங்களில் 5ஆவது முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ. 96 குறைந்துள்ளது. அதன்படி ரூ.2,141-இல் இருந்து ரூ.2,045ஆக குறைந்துள்ளது.

அதேநேரம், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.1068.50ஆக உள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

இதையும் படிங்க:இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

ABOUT THE AUTHOR

...view details