ஹைதராபாத்: இன்றைய சூழலில் சமூக வலைதளத்தின் அதீத வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. அன்றாட வாழ்வில் சமூக வலைதளங்களின் பயன்பாடு ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. ஏன் இன்னும் ஒரு படி மேல் போய் சமூக வலைதளங்களின் பயன்பாடு பல மனிதர்களின் வாழ்வாதாரமாக மாறியுள்ளது. எது இல்லையென்றாலும் பராவாயில்லை சமூக வலைதளத்தின் பங்கு இல்லாமல் இருக்க முடியாது என்கின்ற நிலைக்கு சமூக வலைதளங்கள் மனிதர்களை கட்டுக்குள் வைத்துள்ளது.
பொழுது போக்கிற்காக உருவாக்கப்பட்ட ஒன்று இன்று உலகையே மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. பொழுது போக்கு எனத் தொடங்கி வேலை, வியாபாரம், படிப்பு, விளையாட்டு என அனைத்து துறையையும் தன் கைக்குள் கட்டி வைத்துள்ளது. இந்த வளர்ச்சியினை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தவும் ஆரம்பித்துவிட்டனர். சமூக வலைதளம் மூலம் சைபர் குற்றவாளிகள் சமூக வலைதள பயனாளர்களிடம் நூதன முறையில் பணப்பறிப்பில் ஈடுபட்டு வருவது கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் தற்போது ஹைதராபாத் பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் ஒரு கோடி ரூபாய் வரை இழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதள பதிவில் லைக் மற்றும் கமெண்ட் செய்தால் வீட்டிலிருந்த படியே பணம் சம்பாதிக்கலாம் என்று பதிவிட்டிருந்த நிலையில், இதனை நம்பி ஹைதராபாத்தைச் சார்ந்த பெண் ஒருவர் இந்த பதிவிற்கு கமெண்ட் செய்துள்ளார்.