புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளும் மத்திய பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ள நிலையில், அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு நேரடித் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது.
இதற்கு அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இடையே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. மேலும் புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் கரோனா கால விடுமுறையால் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.
தற்போது கரோனா சற்று குறைந்து வருவதால், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத்தெரிவித்த மாணவர்கள், வகுப்புகளை ஆன்லைனில் நடத்திவிட்டுத்தேர்வை மட்டும் நேரடியாக வைப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆறு அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி நுழைவுவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.