தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

karnataka super spreader: கர்நாடகாவில் ஒரே கல்லூரியைச் சேர்ந்த 182 பேருக்கு கரோனா - கர்நாடகா கல்லூரி விழாவில் கோவிட் 19 பரவல்

கர்நாடகா மாநிலத்தில் உள்ள எஸ்டிஎம் மருத்துவக் கல்லூரியில் இதுவரை 182க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

SDM College of Medical Sciences
SDM College of Medical Sciences

By

Published : Nov 26, 2021, 5:15 PM IST

கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியில் SDM College of Medical Sciences என்ற மருத்துவ கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி தற்போது கோவிட்-19 பெருந்தொற்றின் புதிய மையமாக உருவெடுத்துள்ளது.

இந்த கல்லூரியில் நவம்பர் 17ஆம் தேதி புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், நிகழ்வில் பங்கேற்ற பலருக்கு கரோனா அறிகுறிகள் தென்படவே, அக்கல்லூரியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இதுவரை 182 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் தற்போது கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். அக்கல்லூரியைச் சேர்ந்த மற்ற மாணவர்களுக்கும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விழாவில் பங்கேற்ற பெற்றோர்களையும் கோவிட் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று கண்டுபிடிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாள்களாக தார்வாட் பகுதியில் தினசரி தொற்று புதிதாக ஏதும் பதிவாகாமல் இருந்த நிலையில், தற்போது மாநிலத்தின் புதிய கரோனா மையமாக இப்பகுதி உருவெடுத்துள்ளது.

இதையும் படிங்க:Covid 19 new variant: உலக நாடுகளை மிரட்டும் புதுவகை கரோனா; இந்தியாவிலும் உஷார்நிலை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details