தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குழம்பில் கரப்பான் பூச்சி: டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் விசாரணை - delhi latest news in hindi

நோயாளிக்கு வழங்கப்பட்ட குழம்பில் கரப்பான் பூச்சி கண்டெடுக்கப்பட்ட நிலையில் டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் விசாரணையை தொடங்கியுள்ளது.

குழம்பில் கரப்பான் பூச்சி
குழம்பில் கரப்பான் பூச்சி

By

Published : Nov 15, 2022, 10:20 AM IST

டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட குழம்பில் கரப்பான் பூச்சி இருந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் விசாரணையை தொடங்கியுள்ளது.

குழம்பில் கரப்பான் பூச்சி இருந்த புகைப்படத்தை ட்விட்டரில் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர், சாப்பாடு உடன் இந்த குழம்பை நான்கு வயது குழந்தைக்கு கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

குழம்பில் கரப்பான் பூச்சி

அறுவை சிகிச்சைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த குழந்தைக்கு உணவு எதுவும் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை எட்டு நாட்களுக்கு வெறும் வயிற்றில் இருந்துள்ளார். ஞாயிறு அன்று (நவ. 13) குழந்தைக்கு பருப்பு குழம்பும் கஞ்சியும் கொடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அவருக்கு முதல் முறையாக உணவு வழங்கப்பட்டது. ஆனால் அதில் கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்டு குழந்தையின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு எய்ம்ஸில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இதையும் படிங்க:ஜம்முவில் இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு...!

ABOUT THE AUTHOR

...view details