ஆந்திரா:தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது போல், ஆந்திராவில் சங்கராந்தி விழா கொண்டாடப்படும். இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் சேவல் சண்டை நடைபெறும். இந்தப்போட்டிக்கு அரசு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் தடையை மீறி சேவல் சண்டை ஆண்டுதோறும் பிரமாண்டமாக நடைபெறும்.
இந்நிலையில் ஆந்திரா மாநிலம் முழுவதும் சேவல் சண்டைகள் இன்று (ஜன.15) நீதிமன்றத்தின் தடையை மீறி காக்கிநாடா, கோனாசீமா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, எலுரு உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்தது. இந்த சேவல் சண்டைக்கு YSR காங்கிரஸ் தலைவர்கள் மறைமுகமாக ஆதரித்து வருகின்றனர். சேவல் சண்டையை தடுக்கும் பணியில் ஆந்திர மாநில காவல் துறையினர் ஈடுபட்டாலும் அதன் மூலம் சேவல் சண்டை தடைபடுவதில்லை.
அரசியல் கட்சியினர் ஆதரவு: சேவல் சண்டைக்கு அரசு நேரடியாக தடைவிதித்தாலும் பல்வேறு இடங்களில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் சேவல் சண்டைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கோனாசீமா மாவட்டம், ரவுலபாலம் மண்டலம், வெதுரேஸ்வரம் சாலையில், கொத்தபேட் எம்எல்ஏவும், அரசு கொறடாவுமான சிர்லா ஜக்கிரெட்டி, போட்டிகளை கட்டுப்படுத்தும் காவல் துறையினருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அமலாபுரம் மண்டலம் வன்னெசிந்தாபுடியில் உள்ள ஜெகன்னா ஆகிய ஆளுங்கட்சித் தலைவர்களும் சேவல் சண்டை வளையம் அமைத்துள்ளனர். இதேபோல் கிழக்கு கோதாவரி மாவட்டம், அனபர்த்தியில் எம்எல்ஏ சத்தி சூர்யநாராயண ரெட்டியும், கோகாவரத்தில் எம்எல்ஏ ஜோதுலா சாந்திபாபுவும் சேவல் சண்டையை தொடங்கி வைத்தனர்.
கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தனை: அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் இதற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பார்கள். சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டு கோடிகளில் பந்தயம் கட்டி போட்டியை நடத்துவார்கள். இதற்காகப் பல்வேறு மாநிலங்களிலிருந்து போட்டியில் கலந்து கொள்ள வருவார்கள். இதனையடுத்து கூட்டு மேற்கு கோதாவரி மாவட்டம், கல்லா மண்டல் சீசாலியில் பணம் எண்ணும் இயந்திரங்கள் மூலம் பந்தய பணங்கள் எண்ணப்பட்டன.
பீமாவரம் மண்டலம் தேகாபுரம், அக்கிவீடு மண்டலம் தும்பகடப்பா ஆகிய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை வரை கபடிப் போட்டிகள் நடைபெற்றன. கபடி போட்டி நடைபெற்ற வளாகம் சேவல் சண்டை பந்தயங்களுக்கான இடமாக மாறியது. நிடமறு, சீசாலி, தேகபுரம் ஆகிய இடங்களில் டிஜிட்டல் திரையில் போட்டியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பந்தயம் ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை பந்தயம் கட்டப்படுகிறது. ஒவ்வொரு வட்டத்திலும் கோடிக்கணக்கான ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டது.
இதற்கிடையில் பட்டயகுடம் மண்டலம் துடுக்கூரில் பழங்குடியினரின் பாரம்பரிய சேவல் சண்டை பந்தயத்தை எம்எல்ஏ டெல்லம் பாலராஜு தொடங்கி வைத்தார். கோதாவரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போகி தினமான நேற்று(ஜன.14) நடந்த பந்தயம், சூதாட்டம் என அனைத்திலும் சுமார் ரூ.400 கோடி கை மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.