அமராவதி:ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை முன்னிட்டு பல பகுதிகளில் சேவல் சண்டை நடத்தபட்டது. இந்த போட்டிகளில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்கள் நேரடியாக தலையிட்டு, சேவல் சண்டையை நடத்தியதாக கூறப்படுகிறது.
அதோடு பல கோடி ரூபாய் பந்தயம் கட்டப்பட்டு சூதாட்டம் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சொல்லப்போனால், பணம் எண்ணும் எந்திரம், சிசிடிவி, மது விற்பனை, அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இந்த சேவல் சண்டை போட்டி நடத்தப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் முழுவதும் கோதாவரி, கிருஷ்ணா மற்றும் குண்டூர் பகுதிகளில் சேவல் சண்டை வெகு விமர்சையாக நடந்துள்ளது. காக்கிநாடா, கோனாசீமா, கிழக்கு கோதாவடி, மேற்கு கோதாவரி மற்றும் எலுரு மாவட்டங்களில் பல நூறு கோடி வரை சேவல் சண்டை மூலம் கைமாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.