தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் கடல் சீற்றம்.. ஆழ்கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு! - கேரளாவில் ஆழ்கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில், ஆழ்கடலில் தத்தளித்த 5 மீனவர்களை, கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.

மீனவர்கள்
Coast Guard

By

Published : Mar 4, 2021, 5:05 PM IST

கேரள மாநிலம் பெக்கல் கடற்கரையிலிருந்து ஆறு நாட்டிக்கல் மைல் தொலைவில் இன்று (மார்ச்.4) அதிகாலை, ஐந்து மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தால், படகு கவிழ்ந்து விபத்துக்குளானது.

இதுகுறித்து கடற்படைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர், மீனவர்களை பத்திரமாக மீட்டனர்.

இந்த தகவலின்படி, ஐந்து மீனவர்களும் திருவனந்தப்புரத்தை சேர்ந்வர்கள் ஆவர். விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படைக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க:'கட்சி சின்னத்தில் இனிப்புகள்' கார சாரமாகும் மேற்கு வங்க தேர்தல்!

ABOUT THE AUTHOR

...view details