தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத்தில் ரூ.350 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்... - மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

குஜராத்தில் ரூ.350 கோடி மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் போதைப்பொருள்களை இந்திய கடலோரக் காவல் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 8, 2022, 11:54 AM IST

அகமதாபாத்(குஜராத்):இந்திய கடலோரக் கடற்படை, குஜராத் ஏடிஎஸ் இணைந்து இன்று (அக்.8) நடத்திய சோதனையில் சர்வதேச கடல் பகுதியின் அருகே 6 பணியாளர்களுடன் பயணித்த அல் சகர் என்ற பாகிஸ்தானிய கப்பலில் 350 கோடி ரூபாய் மதிப்பிலான 50 கிலோ ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணைக்காக, அக்கப்பலை ஜகா பகுதிக்கு கொண்டு செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்திய கடலோரக் காவல் படையுடன் இணைந்து குஜராத் ஏடிஎஸ் கடந்தாண்டு முதல் மேற்கொண்ட ஆறாவது ஆபரேஷன் ஆகும்.

முன்னதாக, கடந்த செப்.14 ஆம் தேதி பாகிஸ்தான் படகு ஒன்றில் இருந்து சுமார் ரூ.200 கோடி மதிப்புள்ள 40 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மும்பையில் ரூ.120 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.. முன்னாள் ஏர் இந்தியா விமானி கைது

ABOUT THE AUTHOR

...view details