தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேர்தல் விதிமீறல் புகார்: முதலமைச்சரிடம் விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்!

திருவனந்தபுரம்: தேர்தல் விதிமீறல் புகார் தொடர்பாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது.

By

Published : Dec 15, 2020, 6:28 AM IST

முதலமைச்சர்
முதலமைச்சர்

கேரளாவில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டும் என முதலமைச்சர் பினராயி விஜயன் விடுத்த அறிவிப்புக்கு எதிராக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவை மாநிலத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளன.

அதில், மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து வரும்போது, முதலமைச்சரின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி இது சிறுபிள்ளைத்தனம் என விமர்சித்துள்ளது.

மாநிலத்தில் கோவிட்-19 சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. தடுப்பூசியை இலவசமாக வழங்குவதற்கான அறிவிப்பானது சிகிச்சை விளக்கும் செயல்முறையின் ஒரு பகுதி மட்டுமே எனத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முதலமைச்சரிடம் விளக்கம் கோரியுள்ளது. முதலமைச்சர் பதிலளித்த பிறகே அடுத்தக்கட்ட முடிவு எடுக்க முடியும் எனக் கூறுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details