சென்னை:ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஜிவான் பகுதியில் இந்திய ரிசர்வ் காவல் படையினர் 14 பேர் பயணம் செய்த வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில், மூன்று காவலர்கள் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரிசர்வ் காவல் படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் கண்டனம்
இந்நிலையில், ஸ்ரீநகர் தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் , "ஸ்ரீநகர் அருகே காவல் துறை பேருந்து மீது பயங்கரவாத தாக்குதல் நடந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
இந்த கொடூரமான தாக்குதலை கண்டிப்பதோடு, வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மற்ற வீரர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்ரீநகர் தாக்குதல்: மரணித்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்வு!