குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி வதோதராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நேற்று (பிப். 14) பங்கேற்றார். அம்மாநிலத்தில் வரும் 21ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலுக்கான பரப்புரையில் முதலமைச்சர் விஜய் ரூபானி ஈடுபட்டபோது மேடையிலேயே மயங்கிவிழுந்தார். உடனடியாக அவர் யு.என். மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவருக்குச் சுயநினைவு தப்பியது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் சிறிது காலம் ஓய்வெடுத்து பணிகளைத் தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விஜய் ரூபானியின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். அத்துடன் அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டில், உள் துறை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா ஆகியோர் நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
இதையும் படிங்க:102 வயதிலும் வரிசையில் நின்று வாக்களித்த முதியவர்!