புதுச்சேரி : 75ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்னும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா பாகூர் கொம்யூனில் உள்ள மணப்பட்டு கிராமத்தில் இன்று (ஆக. 3) தொடங்கப்பட்டது.
மணப்பட்டு வனத் துறை தோட்டத்தளத்தில் மரம் நடும் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, ”புதுச்சேரி பல்வேறு இடங்களில் வறட்சியாக உள்ளது. இதனைப் பசுமையாக்க வேண்டுமென துணைநிலை ஆளுநர் விரும்பினார். தற்போது 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பல லட்சம் மரங்கள் நடப்பட்டு புதுச்சேரியைப் பசுமையாக்குவோம்.