தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாள் - ஆதரவாளர்கள் கொண்டாட்டம் - cm rangasamy

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் 71 ஆவது பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும், பேனர் வைத்தும் கொண்டாடி வருகின்றனர்.

புதுச்சேரி முதலமைச்சர்
புதுச்சேரி முதலமைச்சர்

By

Published : Aug 4, 2021, 3:51 PM IST

புதுச்சேரி: முதலமைச்சர் ரங்கசாமி இன்று (ஆக.4) தனது 71 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளையொட்டி ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் வித்தியாசமான பேனர்களை வைத்துள்ளனர்.

முதலமைச்சர் ரங்கசாமியை நடிகருக்கு இணையாக சித்தரித்து தொண்டர்கள் பேனர்கள் வைத்துள்ளனர். அவருக்குப் பல்வேறு கட்சி தலைவர்களும் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அன்னதானம் பரிமாறினார்

முதலமைச்சர் ரங்கசாமி அப்பா பைத்தியசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

முன்னதாக நேற்று (ஆக.3) என்.ஆர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஜெயபால் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் கரோனா பரவல் காரணமாக முதலமைச்சர் பிறந்தநாளன்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடியில் உள்ள அப்பா பைத்தியசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர் அவரே அங்கு வந்தவர்களுக்கு அன்னதானம் பரிமாறினார்.

இதையும் படிங்க: கர்நாடக அமைச்சர்கள் பதவியேற்பு விழா

ABOUT THE AUTHOR

...view details