தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 21, 2022, 10:42 PM IST

ETV Bharat / bharat

'இந்திய அமைப்பை நம்பாத தமிழ்நாடு' - மேகதாது தீர்மானத்திற்கு கர்நாடக முதலமைச்சர் கண்டனம்

ஒரு மாநிலத்தின் உரிமையை, மற்றொரு மாநிலம் பறிக்கும் விதத்தில் உள்ள தமிழ்நாட்டின் தீர்மானம் மக்கள் விரோதமானது என்றும்; நாட்டின் அமைப்பு மீது தமிழ்நாட்டிற்கு நம்பிக்கை இல்லை என்பதைத்தான் இந்தத் தீர்மானம் குறிக்கிறது எனத் தமிழ்நாட்டின் தனித்தீர்மானத்திற்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய அமைப்பை நம்பாத தமிழ்நாடு
இந்திய அமைப்பை நம்பாத தமிழ்நாடு

பெங்களூரு(கர்நாடகா):மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுக்கியதைக் கண்டித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனித் தீர்மானம் ஒன்றை இன்று (மார்ச் 21) தாக்கல் செய்தார்.

அத்தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "மேகதாது அணை கட்டக்கூடிய கர்நாடகாவின் முயற்சிகளை தமிழ்நாடு அரசு எல்லா வடிவிலும் எதிர்க்கும்" எனக் கூறினார்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானத்திற்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் சட்டவிரோதமானது.

'இந்தியாவை நம்பாத தமிழ்நாடு'

ஒரு மாநிலத்தின் உரிமையை மற்றொரு மாநிலம் பறிக்கும் விதத்தில் உள்ள இந்த தீர்மானம் மக்கள் விரோதமானது. நாட்டின் அமைப்பு மீது தமிழ்நாட்டிற்கு நம்பிக்கை இல்லை என்பதைத்தான் இந்த தீர்மானம் குறிக்கிறது.

தமிழ்நாட்டின் இந்த முடிவுக்கு கர்நாடக மக்களும், அரசும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. மேகதாதுவில் அணை கட்டும் எங்கள் முடிவில் உறுதியாக இருக்கிறோம். இந்த விவகாரம் எங்கள் மாநிலத்தில் தொடங்கி ஓடும் காவிரி ஆறு தொடர்பானது.

காவிரி தீர்ப்பாயத்தின் மூலம் தமிழ்நாடு 177.25 டிஎம்சி தண்ணீரை வைத்துள்ளது. இது கர்நாடகத்தை விட அதிகம். தமிழ்நாட்டின் அரசியல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், மேகதாது அணையைக் கட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் எங்கள் அரசு எடுக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மேகதாது அணைக்கு எதிராக தனித் தீர்மானம் நிறைவேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details