தந்தை பெரியாரின் 47 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, பாலாஜி திரையரங்கம் எதிரே உள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு, முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர்கள், பெரியார் இயக்கத் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியார் சிலைக்கு நாராயணசாமி மரியாதை! - புதுச்சேரி செய்திகள்
புதுச்சேரி: தந்தை பெரியார் மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது சிலைகளுக்கு முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
memorial
இதனைத்தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினமும் இன்று கடைபிடிக்கப்படுவதால், புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: 'பெரியார் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம்!'