தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புத்தாண்டு 2021! - மணக்குள விநாயகர் கோவிலில் முதலமைச்சர் வழிபாடு! - சிறப்பு பூஜையில் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புத்தாண்டையொட்டி புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு வழிபட்டார்.

cm
cm

By

Published : Jan 1, 2021, 1:14 PM IST

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கரோனா காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எந்த தடையுமின்றி வழக்கமான உற்சாகத்துடன் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில், தங்க கவசத்தால் விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் முதலமைச்சர் நாராயணசாமி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கரோனா காரணமாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்றும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

புத்தாண்டு 2021! - மணக்குள விநாயகர் கோவிலில் முதலமைச்சர் வழிபாடு!

இதையும் படிங்க:துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து மீண்டும் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details