தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி மைதானம் திறப்பு

இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி மைதானமான பிா்சா முண்டா மைதானத்தை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் திறந்து வைத்தார்.

ஹாக்கி மைதானம்
ஹாக்கி மைதானம்

By

Published : Jan 6, 2023, 7:53 AM IST

ஒடிசா மாநிலம் ரூா்கேலாவில் கட்டப்பட்டுள்ள நாட்டிலேயே மிகப்பெரிய ஹாக்கி மைதானமான பிா்சா முண்டா மைதானத்தை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் நேற்று (ஜனவரி 5) திறந்து வைத்தாா். ரூ.146 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானம் 15 ஏக்கா் பரப்பளவை கொண்டதாகும். இங்கு 21,000 பார்வையாளர் இருக்கை வசதி உள்ளது.

ஒடிசாவில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடைபெறவுள்ள ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி 2023 போட்டிகளில் பங்கேற்பதற்காக, ஒடிசாவுக்கு வருகைதந்த ஹாக்கி வீரர்களை நவீன் பட்நாயக் நேரில் சந்தித்து உரையாடினார்.

அப்போது இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதோடு இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

வரும் 13ஆம் தேதி முதல் இந்த போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் தொடங்க உள்ளது. புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலாவில் உள்ள இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன.

இதையும் படிங்க: EXCLUSIVE: "டேபிள் டென்னிஸை விட்டே வெளியேற கூட நினைத்திருக்கிறேன்" - தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன்!

ABOUT THE AUTHOR

...view details