தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மே.வங்க 7ஆம் கட்ட தேர்தல்: சக்கர நாற்காலியில் வாக்களிக்க வந்த முதலமைச்சர்! - மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் ஏழாம் கட்டமாக 34 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் சக்கர நாற்காலியில் வந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது வாக்கினை பதிவுசெய்தார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

By

Published : Apr 26, 2021, 10:52 PM IST

மேற்குவங்கம்:34 தொகுதிகளுக்கு நடைபெற்ற ஏழாம் கட்டத் தேர்தலில் 75 விழுக்காட்டுக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன.

முதலமைச்சரும்,திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வாக்களித்தபின் வெளியேவந்த அவர் தங்கள் கட்சி வெற்றிபெறும் என்பதைக் காட்டும் வகையில் விரல்களை உயர்த்திக் காட்டினார்.

பொதுமக்கள் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்து வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். திரிணாமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிசேக் பானர்ஜி கொல்கத்தா பவானிப்பூரில் வாக்களித்தார்.

மம்தா பானர்ஜி

திரிணாமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் நுஸ்ரத் ஜகான் பெற்றோருடன் வந்து கொல்கத்தாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மாலை ஐந்தரைமணி நிலவரப்படி 75.06 விழுக்காட்டுக்கு மேல் வாக்குகள் பதிவாகியிருந்தன.

சக்கர நாற்காலியில் வாக்களிக்க வந்த முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details