டெல்லி:மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து அவர் 5 நாள் சிபிஐ காவலில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே வழக்கு ஒன்றில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயினும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கைதான இருவரும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் டெல்லியில் இன்று (மார்ச் 1) முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த அரவிந்த் கெஜ்ரிவால், கட்சியின் வருங்கால திட்டங்கள் குறித்து விவாதித்தார். மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயினும், கல்வி அமைச்சராக இருந்த சிசோடியாவும் சிறப்பாக செயல்பட்டனர். அதை பிரதமர் மோடி விரும்பவில்லை. இருவரையும் கைது செய்தால் டெல்லி அரசு முடங்கிவிடும் என பிரதமர் எண்ணினார். ஆனால் அந்த எண்ணம் தவறானது. ஆம் ஆத்மி புயல் போன்றது. அதை யாரும் முடக்க முடியாது.