தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் எடாலா ராஜேந்தரிடமிருந்து அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்டு, அது முதலமைச்சர் சந்திரசேகர ராவிடமே தற்போது கொடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் இந்த உத்தரவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார். எடாலா ராஜேந்தர் மீது மேடக் மாவட்ட விவசாயிகள் நில அபகரிப்பு புகார்கள் அளித்தனர்.
மேடக் மாவட்டத்தில் புதிய கால்நடை தொழிற்சாலை தொடங்குவதாகக் கூறி அமைச்சரிடம் இருந்து நில அபகரிப்புக்கு அழுத்தம் அளிக்கப்பட்டதாக, அங்குள்ள எட்டு மாவட்ட விவசாயிகள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
தெலங்கானா அமைச்சர் பதவி பறிப்பு இதுதொடர்பாக விசாரணை நடத்த முதலமைச்சர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கோவிட்-19 பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மாநிலங்களின் கைவசம் 79 லட்சம் தடுப்பூசிகள் - மத்திய அரசு தகவல்