சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா புதுச்சேரி வந்தார். தனியார் விடுதியில் அவரை அதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர், என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ரங்கசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்வம், ஜெயபால் ஆகியோர் சந்தித்தனர்.
மேலும் அதிமுக எம்.பி. கோகுலகிருஷ்ணன், என்.ஆர். காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சந்திப்பில் பங்கேற்றனர்.