தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிளப்ஹவுஸில் பெண்களுக்கு எதிராக ஆபாச பேச்சு - மூவர் கைது - மும்பை காவல்துறையை மூவரை கைது

கிளப்ஹவுஸ் தளத்தில் பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்துக்களை பேசிய மூவரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது.

Clubhouse app chat case
Clubhouse app chat case

By

Published : Jan 21, 2022, 1:22 PM IST

கிளப்ஹவுஸ் சமூக வலைத்தளத்தில் ஆபாச கருத்துகளை பேசிய குற்றச்சாட்டில் ஹரியானாவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமிய பெண்கள் குறித்து கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் இம்மூவரும் கைதாகியுள்ளனர்.

மும்பைச் சேர்ந்த அமைப்பு ஒன்று கொடுத்த காவல்துறை புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட கிளப்ஹவுஸ் பக்கத்தையும் முடக்கக் கோரி புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மும்பை காவல்துறையின் இந்த கைது நடவடிக்கையை சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி பாராட்டியுள்ளார். வெறுப்புக்கு பரப்புரைக்கு பதிலடி தரும் விதமாக குற்றவாளிகளை கைது செய்த மும்பை காவல்துறைக்கு பாராட்டுக்கள் என பிரியங்கா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மண்டபத்தில் குத்தாட்டம்... மணமகளுக்கு பளார்... திருமணம் நிறுத்தம்

ABOUT THE AUTHOR

...view details