கிஷ்த்வார் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள டெக்கன் தாலுகாவில் ஹோன்சர் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள பல்வேறு வீடுகள் கனமழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கின.
இதில் 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மாயமான 40 பேரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த இயற்கை பேரிடர் அதிகாலை 4.30 மணிக்கு நடந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பேய் மழை காட்டாற்று வெள்ளம் மழை, காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பேய் மழை வெள்ளத்துக்கு 7 பேர் உயிரிழப்பு! இது குறித்து அவர் ட்விட்டரில், “மத்திய அரசு கிஷ்த்வார் மற்றும் கார்கில் மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை கூர்ந்து கவனித்துவருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முடிந்தளவு அனைத்து உதவிகளும் செய்யப்படும். அனைவரின் பாதுகாப்புக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை