தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வழக்கறிஞரை கொலை செய்ய முயன்ற இருவர் கைது! - கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் நாராயங்குடா பகுதியில் நில தகராறு வழக்கில் கோட்டை விட்ட தனது வழக்கறிஞரை கொலை செய்ய முயன்ற இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

வழக்கறிஞரை கொலை செய்ய முயன்ற இருவர் கைது
வழக்கறிஞரை கொலை செய்ய முயன்ற இருவர் கைது

By

Published : Feb 23, 2021, 3:57 PM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகேவுள்ள நாராயங்குடா பகுதி ஹிமாயத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜஷ்வந்த். இவர், உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இவரிடம் சமீபத்தில் ஒருவர் தனது நில தகராறு விவகாரத்தில் தனக்கு சாதகமாக வாதாடி நிலத்தை தன்னிடம் மீட்டுத்தரக் கோரியுள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணை கடந்த சில நாள்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் நடந்தது.

இந்த, விசாரணையின் முடிவில் வழக்கு எதிர்க்கட்சியினருக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கறிஞரின் அலட்சியம் காரணமாகவே வழக்கை இழந்ததாக கட்சிதாரர்கள் உணர்ந்தனர்.

இதனால், வழக்கறிஞரை பழிவாங்க நினைத்த அவர், தனது நண்பருடன் சேர்ந்து பிப். 17ஆம் தேதி மாலை 6 மணியளவில் கவுடா ஹாஸ்டல் அருகே அவரைச் சுற்றி வளைத்து வழக்கறிஞரை கொலை செய்ய முயன்றனர்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், தங்களது தொலைபேசிகளில் வீடியோ எடுக்க தொடங்கினர். இதனால், பயந்துபோன அவர்கள் சற்று பின்வாங்கத் தொடங்கினர். மேலும், இது குறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், வழக்கறிஞரை கொலை செய்ய முயன்ற இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: காணொலி: திருமணத்திற்கு மறுத்ததால் ஓடு ரயிலின் மீது பெண்ணை தள்ள முயன்ற இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details