தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டின் தூய்மையான நகரம் - தொடர்ந்து 5ஆவது முறை விருதை தட்டிச் சென்ற இந்தூர் - நாட்டின் தூய்மை நகரம் இந்தூர்

Cleanliness Survey 2021 பட்டியல் அடிப்படையில் நாட்டின் தூய்மையான நகரம் என்ற விருதை இந்தூர் நகரம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக பெறுகிறது.

Cleanliness Survey 2021
Cleanliness Survey 2021

By

Published : Nov 20, 2021, 5:29 PM IST

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை சார்பில், தலைநகர் டெல்லியில் இன்று 2021ஆம் ஆண்டுக்கான தூய்மை கணக்கெடுப்பு விருதுகளையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று விருதுகளை வழங்கினார். Cleanliness Survey 2021 அடிப்படையில் தூய்மை நகரப் பட்டியலில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தூர் நகரம் முதலிடத்தை பெற்றுள்ளது.

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இவ்விருதை இந்தூர் பெறுகிறது. இந்த விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தூர் மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.

குடியரசுத் தலைவர் பேச்சு

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், "நாட்டின் சுதந்திரப் பெருவிழாவை கொண்டாடும் வேளையில், தூய்மை கணக்கெடுப்பு விருதுகளை வழங்குவது இந்தாண்டு முக்கியத்துவம் பெறுகிறது. கடவுளுக்கு அடுத்தபடியாக தூய்மை என்று தேசப்பிதா அண்ணல் காந்தி கூறியுள்ளார்.

தூய்மை இந்தியா இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதன் மூலம், காந்தியின் இந்த முன்னுரிமைப் பணிகளை அரசு முன்னெடுத்துச் செல்கிறார். நாடு முழுவதும் தூய்மை என்ற இலக்கை நோக்கி முயற்சி மேற்கொள்வதே நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட் பெருந்தொற்று காலத்திலும் தூய்மைப் பணியாளர்களும், துப்புரவுத் தொழிலாளர்களும் அயராது பணியாற்றினர். பாதுகாப்பற்ற துப்புரவு முறைகளால் துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது.

கழிவுநீர் தொட்டிகள் மற்றும் செப்டிக் டேங்குகளை இயந்திரம் மூலம் சுத்தம் செய்வதை ஊக்குவிக்க, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையால் 246 நகரங்களில் மேற்கொள்ளப்படும் ‘துப்புரவு பணியாளர் பாதுகாப்பு சவால்’ என்ற திட்டம் பாராட்டுக்குரியது. இந்தத் திட்டத்தை அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறையை முற்றிலுமாக ஒழிப்பது அரசின் கடமை மட்டுமின்றி, சமுதாயம் மற்றும் குடிமக்களுக்கும் இதில் பொறுப்பு உள்ளது" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:27 Maoists Killed: 6 மாநிலங்களுக்கு முழுஅடைப்பு கோரிக்கைவிடுத்த மாவோயிஸ்ட்டுகள்

ABOUT THE AUTHOR

...view details