தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 21, 2021, 7:59 PM IST

ETV Bharat / bharat

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தனித்தேர்வு தேதி அறிவிப்பு

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான தனித்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிபிஎஸ்இ
சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான தனித் தேர்வு ஆகஸ்ட் 16ஆம் தேதிமுதல் செப்டம்பர் 15ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்கள் உயர் கல்வி சேர்க்கைக்கான காலதாமதம் குறைக்கப்படும் என சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யாம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

வழக்கமான முறையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கோவிட்-19 தொற்று காரணமாக பொதுத்தேர்வு இந்தாண்டு நடத்தப்படவில்லை. அவர்களுக்கு முந்தைய தேர்வு மதிப்பெண்களை வைத்து இறுதி மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன.

ஆனால் தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த விதிமுறை கிடையாது எனவும், அவர்கள் நிச்சயம் தேர்வு எழுத வேண்டும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:கோவிஷீல்டு தடுப்பூசி ஆயுள் வரை பாதுகாப்பு தரும் - ஆய்வில் தகவல்

ABOUT THE AUTHOR

...view details