ஃபிரோசாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில், ஷிகோஹாபாத் அருகே கிஷன்பூர் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவர்களிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர்.
அப்போது சிவம்(7) என்ற மாணவரின் மார்பில் சக மாணவர்கள் குதித்ததாகத் தெரிகிறது. இதில், மாணவர் அங்கேயே சுருண்டு விழுந்துவிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.