டெல்லி:தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, தாய் ஸ்மைல் நிறுவனத்தின் விமானம் கொல்கத்தாவிற்கு புறப்பட்டு உள்ளது. ஓடுதளப் பாதையில் இருந்து விமானம் பறக்க இருந்த நிலையில் விமானத்தினுள் இரு பயணிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் கைகலப்பில் முடிய ஒரு பயணி மற்றொரு பயணியை சரமாரியாக தாக்கத் தொடங்கினார். சில விநாடிகளில் அருகில் இருந்த மற்ற பயணிகளும் சேர்ந்து பயங்கரத் தாக்குதலில் ஈடுபட்டனர். சண்டையிட்டுக் கொண்ட பயணிகளை விமானப் பணிப் பெண் சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.