தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 10, 2022, 3:53 PM IST

ETV Bharat / bharat

சுருக்குமடி வலை விவகாரத்தால் மீனவர்கள் மோதல் - 3 கிராமங்களில் போலீஸ் குவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் சுருக்குமடி வலை விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள பதற்றம் காரணமாக 3 மீனவர் கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுருக்குமடி வலையால் மீனவர்களுக்குள் மோதல்- 3 கிராமங்களில் போலீஸ் குவிப்பு!
சுருக்குமடி வலையால் மீனவர்களுக்குள் மோதல்- 3 கிராமங்களில் போலீஸ் குவிப்பு!

புதுச்சேரி: சுருக்குமடி வலை பயன்படுத்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தடை விதக்கபட்டுள்ளது. இருப்பினும் புதுச்சேரியில் சில கிராமங்களில் சுருக்குவலை பயன்படுத்தப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராமங்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி ஏற்பட்ட மோதலில் வீராம்பட்டினம் - நல்லவாடு மீனவ கிராமங்களுக்கு இடையே கடல் மார்க்கமாகவும் கடற்கரையிலும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைத் தடுக்க காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த நிலையில் வீராம்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த வாரம் கூடி வரும் 10ஆம் தேதி முதல் புதுச்சேரி துறைமுகத்துக்குள் சுருக்குவலை உடன் வரும் படகுகள் தடை செய்யப்படுகிறது. மீறி வரும் படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (அக்.10) மீனவர்களுக்குள் மோதல் வரக்கூடாது என்பதற்காக காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். வீராம்பட்டினம், நல்லவாடு, வம்பா கீரப்பாளையம் மற்றும் துறைமுகம் உள்ள தேங்காய்த்திட்டு பகுதியில் 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர், காலை 7 மணி முதல் 24 மணி நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடல் வழியிலும் கடலோர காவல்படை சார்பில் ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த முறை மீனவர்களும் ஏற்பட்ட மோதலை தவிர்க்கும் விதமாக காவல் துறை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா உத்தரவின் பேரில் மூன்று கண்காணிப்பாளர்கள் தலைமையில் 300 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுருக்குமடி வலையால் மீனவர்களுக்குள் மோதல்- 3 கிராமங்களில் போலீஸ் குவிப்பு!

இதன் மூலம் மீனவர்களின் மோதலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் மீனவ கிராமங்கள் இடையே மோதல் ஏற்படாது என்று காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:கட்டாய இந்தியைப் புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர் - முதலமைச்சர் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details