தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பேனர்கள் வைப்பதில் பாஜக - டிஆர்எஸ் இடையே மோதல்

ஹைதராபாத்தில் அரசியல் பேனர்கள் வைப்பதில் பாஜக-டிஆர்எஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் கட் அவுட் வைப்பதில் பாஜக - டிஆர்எஸ் கட்சியினர் இடையே மோதல்!
ஹைதராபாத்தில் கட் அவுட் வைப்பதில் பாஜக - டிஆர்எஸ் கட்சியினர் இடையே மோதல்!

By

Published : Jul 2, 2022, 9:18 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், பாஜக தேசிய செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 2) மற்றும் நாளை (ஜூலை 3) நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

இதனிடையே பாஜக மூத்த தலைவர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஹைதராபாத்தின் முக்கிய பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டன. குறிப்பாக மணி ஹெயிஸ்ட் தொடரின் புகைப்படங்கள் அடங்கிய பாஜக எதிர்ப்பு போஸ்டர்கள் சமூக வலைதலங்களில் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு டிஆர்எஸ் தொண்டர்களே காரணம் என்று பாஜகவினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.

இதற்கு முன்னதாக எதிர்க்கட்சி குடியரசுத்தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாக அமைக்கப்பட்டிருந்த பேனர்களை பாஜகவினர் கிழித்து விட்டதாக, சைபராபாத் காவல் ஆணையரிடம் டிஆர்எஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இப்படி, இரு கட்சிகளிடையே பேனர்கள் வைப்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக பெருநகர ஹைதராபாத் மாநகராட்சி, அனுமதியின்றி பேனர்கள் வைத்தவர்களுக்கு அபராதம் விதித்துவருகிறது. அந்த வகையில் இதுவரை அனுமதியின்றி பேனர்கள் வைத்ததற்காக பாஜகவுக்கு ரூ.2 லட்சமும், டிஆர்எஸ் கட்சிக்கு ரூ.1 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்திய குஷ்பு

ABOUT THE AUTHOR

...view details