நடிகர் விஜய் சேதுபதி நேற்று (நவ.2) தனது நண்பர் மகா காந்தி என்பவருடன் விமானத்தில் பயணித்து பெங்களூரு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது விமானத்தில் மகா காந்திக்கும், ஜான்சன் என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாய்த் தகராறு ஏற்பட்டது.
அதன் பிறகு மகா காந்தி மற்றும் விஜய் சேதுபதி விமானத்திலிருந்து இறங்கி, பெங்களூரு விமான நிலையத்தின் வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு காத்திருந்த ஜான்சன் மகா காந்திக்குப் பதிலாக விஜய் சேதுபதியை எட்டி உதைத்தார்.
விஜய் சேதுபதி மீது தாக்குதல்