உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு கடிசம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கோவிட்-19 காலகட்டத்தில் நீதிமன்ற செயல்பாடுகள் மேற்கொள்ள நாடு முழுவதும் இணைய சேவை வசதியை மேம்படுத்த வேண்டும் என்றுள்ளார்.
நீதிமன்ற ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி
அவர் தனது கடிதத்தில், கோவிட்-19 காலத்தில் இணையம் மூலம் வழக்குகளை விசாரித்து, உயர் நீதிமன்ற நீதிபகளுடன் உரையாடும் சூழல் ஏற்பட்டது. அப்போது நான் உணர்ந்த சில விஷயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
நாட்டில் நகர்புறங்களில் இருப்பதுபோல கிராமப்புறங்கள், மலைவாழ் பகுதிகளில் அதிவேக இணைய வசதிகள் ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதில் ஒன்றிய அரசு முழு மூச்சில் செயல்பட வேண்டும். மேலும், நீதிமன்ற ஊழியர்களை முன்களப் பணியாளர்களாகக் கருதி அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடுக்கிவிட வேண்டும்.
கோவிட்-19 காலத்தில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற வழக்கறிஞர்களுக்கு அரசு நிதியுதவி வழங்கிட வேண்டும். நீதித்துறையின் டிஜிட்டர் கட்டமைப்பை அரசு முழுவீச்சில் மேம்படுத்த வேண்டும் என்றுள்ளார்.
இதையும் படிங்க:ஆறு நாள்களில் 3.77 கோடி தடுப்பூசிகள் - பிரதமர் மோடி மகிழ்ச்சி