தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அயோத்தி விவகாரத்தில் ஷாருக்கானின் உதவியை நாடிய பாப்டே! - அயோத்தி வழக்கு பாப்டே தீர்ப்பு

அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் ஷாருக்கான் அமைதி பேச்சு வாரத்தை நடத்த வேண்டும் என எஸ்.ஏ. பாப்டே விரும்பினார்.

CJI Bobde
CJI Bobde

By

Published : Apr 24, 2021, 3:52 PM IST

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவிவகித்த எஸ்.ஏ. பாப்டே பணி ஓய்வு பெற்ற நிலையில், அவரது பிரிவு உபசார விழாவில் பார் கவுன்சில் தலைவரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் நீதித்துறையில் பாப்டேவின் பங்களிப்பு குறித்து பேசினார்.

அப்போது அவர் சுவாரஸ்சிமான தகவலை பகிர்ந்து கொண்டார். அயோத்தி ராம்ஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கை விசாரித்த போது, அதை அமைதி பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கவே பாப்டே விரும்பினார்.

இந்தச் சிக்கலை தீர்க்க முன்னணி நடிகரான ஷாருக்கானைை அமைதி பேச்சு வார்த்தைக் குழுவில் சேர்க்க விரும்பினார். ஷாருக்கானும் இதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். இருப்பினும் அவை சாத்தியமாகாமல் நீதிமன்றமே வழக்கை முடித்து வைக்கும் சூழல் ஏற்பட்டது என்றார்.

இந்திய நீதித்துறை வரலாற்றின் முக்கிய வழக்கின் தீர்ப்பை எஸ்.ஏ. பாப்டே வழங்கியதாக விகாஸ் சிங் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:மனநிறைவுடன் விடைபெறுகிறேன்: பிரிவு விழாவில் பாப்டே பேச்சு

ABOUT THE AUTHOR

...view details