உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி. ரமணாவை பரிந்துரை செய்துள்ளார் ஏஸ்.ஏ. பாப்டே. தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவின் பதவிக்காலம் அடுத்தமாதம் 23ஆம் தேதி (ஏப்ரல் 23) நிறைவடையவுள்ள நிலையில், தனது பரிந்துரை கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார் பாப்டே.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு என்வி ரமணா பெயர் பரிந்துரை! - Supreme court Chief Justice
11:50 March 24
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த என்.வி. ரமணா 2000ஆம் ஆண்டு ஆந்திர மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற ரமணாவின் பதவிக்காலம் அடுத்தாண்டு (2022) ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி வரை உள்ளது.
புதிய தலைமை நீதிபதியாக ரமணா நியமிக்கப்படும் பட்சத்தில் அடுத்தாண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை இவரே பொறுப்பில் தொடர்வர்.
இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி விநியோகத்தை தீவிரப்படுத்த வேண்டும் - மத்திய அரசு